கரோனா பரவல் காரணமாக கடந்த மே 10ஆம் தேதி தொடங்கி மே 24ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால், பேருந்துகள், ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்களில் 50 விழுக்காடு ஊழியர்கள் மட்டுமே இயங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரையில் அரசு அலுவலர்களுக்காக சிறப்பு பேருந்து ஏற்பாடு!
மதுரை: அரசு அலுவலர்களின் வசதிக்காக, மதுரை-பரமக்குடி இடையே இரு நேரங்கள் மட்டும் பேருந்து இயங்க பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் முருகேசன் ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளார்.
இந்நிலையில், அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோர் மதுரையிலிருந்து பரமக்குடி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளுக்குச் செல்ல பேருந்துகள் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். ஆகவே மதுரை-பரமக்குடி இடையே முன்களப் பணியாளர்களுக்கு மட்டும் சிறப்பு பேருந்து இயக்க வேண்டும் என முன்களப்பணியாளர்கள் முன்னதாகக் கோரிக்கை விடுத்தனர்.
அதனை ஏற்ற பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் முருகேசன், சம்பந்தப்பட்ட போக்குவரத்துத் துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு பேசினார். அதனைத் தொடர்ந்து அதிரடியாக காலை 7 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு 8.30 மணிக்கு பரமக்குடி வந்து அடையும் வகையிலும், பரமக்குடியில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு ஏழு மணிக்கு மதுரை சென்றடையும் வகையிலும் சிறப்பு பேருந்து இயக்கபட்டு வருகிறது.