மதுரை:திருநெல்வேலி ரயில்வே யார்டுக்கு உட்பட்ட பகுதியில் ரயில் பாலம் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட மதுரை ரயில்வே கோட்டத்தில், திருநெல்வேலி ரயில்வே யார்டு பகுதியில் அமைந்துள்ள ரயில் பாலம் பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று ரயில்களின் மாற்றம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. அதில்,
ரத்தாகும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் விவரம் பின்வருமாறு,
1. திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லக்கூடிய முன்பதிவில்லா சிறப்பு ரயிலானது (வ.எண்.06675) நாளை (09.08.2023) முழுமையாக ரத்து.
2. திருச்செந்தூர் - வாஞ்சிமணியாச்சி செல்லக்கூடிய முன்பதிவில்லா சிறப்பு ரயிலானது (வ.எண்.06680) நாளை (09.08.2023) முழுமையாக ரத்து.
இதையும் படிங்க:விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்: கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!
பகுதியாக ரத்து செய்யப்படும் ரயில்கள் பின்வருமாறு,
1. தாம்பரம் - நாகர்கோவில் செல்லக்கூடிய அந்தோத்யா சிறப்பு விரைவு ரயில் (வ.எண்.20691) இன்று (08.08.2023) தாம்பரத்தில் இருந்து விருதுநகர் வரை மட்டுமே இயக்கப்படும்.