மதுரை:கூடல் நகர் போன்ற பயணிகள் குறைவாக பயன்படுத்தும் ரயில் நிலையங்களை ஆதர்ஷ் ரயில் நிலையமாக தரம் உயர்த்த எஸ்டிடி பூத், பொது கழிப்பறை, கணிப்பொறி முன்பதிவில்லா பயணச்சீட்டு வழங்கும் வசதி, தேவைப்பட்டால் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் ஆகிய வசதிகளை மேற்கொள்ள வேண்டும்.
ரயில்வே வாரிய வழிகாட்டுதலின் படி பொதுக் கழிப்பறை வசதி அமைக்கப்பட்டுவிட்டது. கணிப்பொறி முன்பதிவு உள்ள பயண சீட்டு வசதியும் ஏற்படுத்தப்பட்டு விட்டது. தற்போது எஸ்டிடி பூத், பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.
ஆனால் இது குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. மதுரை ரயில் நிலையத்தில் அதிக அளவு ரயில்களை கையாள முடியாத போது தான் இரண்டாவது டெர்மினல் பற்றிய பேச்சு எழும். மேலும் மதுரை ரயில் நிலையத்தில் புதிய நடைமேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என்றால் மதுரைக்கு வரும் முக்கிய ரயில்களுக்கு கூடல் நகரில் நிறுத்தம் கொடுக்கலாம். அது பற்றி பரிசிலிக்கப்பட்டு வருகிறது என மதுரை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:புதிதாக ரூ.18.87 கோடி மதிப்பில் சென்னை மாநகராட்சிப்பள்ளிகளில் பாதுகாப்பான நவீன கழிவறைகள்