தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை வழியாக சிறப்பு ரயில்கள் - தென்னக ரயில்வே அறிவிப்பு - மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை வழியாக திருநெல்வேலி - மும்பை தாதர், மதுரை - திருவனந்தபுரம், தாம்பரம் - நாகர்கோவில் ஆகிய சிறப்பு ரயில்களை டிசம்பர் 16-ஆம் தேதி முதல் தென்னக ரயில்வே இயக்க உள்ளது.

மதுரை வழியாக சிறப்பு ரயில்கள்
மதுரை வழியாக சிறப்பு ரயில்கள்

By

Published : Dec 9, 2020, 10:22 PM IST

இதுகுறித்து தென்னக ரயில்வே இன்று (டிச.9) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "திருநெல்வேலியில் இருந்து மும்பை தாதர்வரை வாராந்திர அதிவேக விரைவு ரயில் டிசம்பர் 16-ஆம் தேதியில் இருந்து இயக்கப்பட உள்ளது.

ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று காலை 7:15 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், மங்களூர், தானே வழியாக மும்பை தாதர்க்கு வியாழன் அன்று மாலை 3:00 மணியளவில் சென்றடையும்.

மதுரை வழியாக சிறப்பு ரயில்கள்

மறுமார்க்கத்தில் மும்பை தாதரில் இருந்து ஒவ்வொரு நாளும் வியாழக்கிழமை இரவு 8:40 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை அதிகாலை 4:00 மணியளவில் திருநெல்வேலியை வந்தடையும்.

மதுரையில் இருந்து திண்டுக்கல், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, பாலக்காடு வழியாக திருவனந்தபுரம் செல்லும் சிறப்பு ரயில் டிசம்பர் 24-ஆம் தேதி முதல் நாள்தோறும் இயக்கப்பட உள்ளது. மதுரையில் இருந்து மாலை 4:05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5:20 மணிக்கு திருவனந்தபுரத்தைச் சென்றடையும்.

அதே மார்க்கத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை வரை, அதே ரயில் 23-ஆம் தேதியிலிருந்து நாள்தோறும் இயக்கப்பட உள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் இரவு 8:30 மணிக்கு புறப்படும், இந்த சிறப்பு ரயில் மறுநாள் காலை 10:10 மணிக்கு மதுரையை வந்தடையும்.

தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் வரை வாரம் மூன்று முறை அதிவேக சிறப்பு ரயில் டிசம்பர் 16-ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய கிழமைகளில் இரவு 7:25 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு, திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி வழியாக மறுநாள் காலை 7:30 மணி அளவில் நாகர்கோவிலை சென்றடையும்.

அதே மார்க்கத்தில் டிசம்பர் 17-ஆம் தேதி முதல் நாகர்கோவிலில் இருந்து திங்கள், செவ்வாய், வியாழன் ஆகிய கிழமைகளில் மாலை 4:15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4:15 மணிக்கு தாம்பரத்தைச் சென்றடையும். மேற்கண்ட ரயில்களுக்கு முன்பதிவு செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சென்னை விரைவு ரயில் இயக்கம்!

ABOUT THE AUTHOR

...view details