மதுரை:இது குறித்து தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், "மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட 27 ரயில் நிலையங்களில் உள்ளூர் பிரபல உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
மதுரை ரயில் நிலையத்தில் 33 சுங்குடி சேலை உற்பத்தியாளர்கள் தலா 15 நாட்கள் தொடர்ந்து சுங்குடி சேலைகள் விற்பனை செய்து சாதனை வருமான அளவாக 81 லட்சத்து 91 ஆயிரத்து 847 ரூபாய் ஈட்டியுள்ளனர். இதே போல திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பத்தமடை பாய் விற்பனையில் 28 லட்சத்து 23 ஆயிரத்து 71 ரூபாயும், தூத்துக்குடியில் மக்ரூன் விற்பனையில் 23 லட்சத்து 56 ஆயிரத்து 270 ரூபாயும் ஈட்டியுள்ளனர்.
மேலும், திருச்செந்தூரில் பனை பொருட்கள் விற்பனையில் 23 லட்சத்து 35 ஆயிரத்து 405 ரூபாயும், கோவில்பட்டியில் கடலை மிட்டாய் விற்பனையில் 15 லட்சத்து 43 ஆயிரத்து 975 ரூபாயும், திண்டுக்கல்லில் சின்னாளப்பட்டி கைத்தறி சேலை விற்பனையில் 12 லட்சத்து 24 ஆயிரத்து 297 ரூபாயும், ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா விற்பனையில் 5 லட்சத்து 97 ஆயிரத்து 655 ரூபாயும், தென்காசியில் மூங்கில் மர வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையில் 5 லட்சத்து 79 ஆயிரத்து 210 ரூபாயும், ராமநாதபுரத்தில் கருவாடு விற்பனையில் 5 லட்சத்து 34 ஆயிரத்து 650 ரூபாயும் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.
மேலும் ராமேஸ்வரத்தில் கடல் பாசி பொருட்கள் விற்பனையில் 3 லட்சத்து 67 ஆயிரத்து 201 ரூபாயும், மணப்பாறையில் முறுக்கு விற்பனையில் 3 லட்சத்து 55 ஆயிரத்து 10 ரூபாயும், மண்டபத்தில் வெட்டிவேர் பொருட்கள் விற்பனையில் 3 லட்சத்து 575 ரூபாயும், காரைக்குடியில் செட்டிநாடு நொறுக்கு தீனிகள் விற்பனையில் 3 லட்சத்து 429 ரூபாயும், சாத்தூரில் சேவு விற்பனையில் 2 லட்சத்து 97 ஆயிரத்து 640 ரூபாயும், உள்ளூர் சிறு குறு உற்பத்தியாளர்கள் வருமானம் ஈட்டியுள்ளனர்.
மேலும் கொட்டாரக்கரா மற்றும் புனலூரில் தேங்காய் எண்ணெய், மசாலா பொருட்கள், விருதுநகரில் சேவு, அம்பாசமுத்திரத்தில் குழந்தைகளுக்கான மர விளையாட்டு பொருட்கள், பழனியில் பஞ்சாமிர்தம், சிவகங்கையில் செட்டிநாடு நொறுக்கு தீனிகள், கொடைக்கானல் ரோட்டில் கொடைக்கானல் மலை சார்ந்த உற்பத்தி பொருட்கள், ராஜபாளையத்தில் ஆயத்த ஆடைகள், பரமக்குடியில் விவசாய விளைபொருட்கள், வாஞ்சி மணியாச்சியில் மக்ரூன், மானாமதுரையில் மண்பாண்ட பொருட்கள், சிவகாசியில் பேப்பர் சார்ந்த தயாரிப்புகள் விற்பனை போன்றவை நடைபெற்று வருகின்றன.