மதுரை:மேட்டுப்பாளையத்திற்கு திருநெல்வேலி சந்திப்பில் இருந்து தென்காசி மற்றும் ராஜபாளையம் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் ஒன்றை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. 1. ரயில் எண். 06030 திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் 06ஆம் தேதி 2023 முதல் ஜூன் 29, 2023 வரை வியாழக்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து 7.00 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் 07.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடையும்.
2. ரயில் எண். 06029 மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் 07ஆம் தேதி 2023 முதல் ஜூன் 30, 2023 வரை வெள்ளிக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து 7.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் 07.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.