தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’மதுரை வழியாக செல்லும் மேலும் சில ரயில்கள் ரத்து’ - தெற்கு ரயில்வே மதுரைக் கோட்டம் - ரயில்கள் ரத்து நீட்டிப்பு

மதுரை : பயணிகள் வரத்து குறைவு காரணமாக மேலும் சில ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரைக் கோட்டம் தெரிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே மதுரை கோட்டம்
தெற்கு ரயில்வே மதுரை கோட்டம்

By

Published : May 26, 2021, 8:49 PM IST

பயணிகள் வருகை குறைவின் காரணமாக சில பயணிகள் ரயில்களின் சேவை மே 31ஆம் தேதி வரை ஏற்கனவே ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மேலும் சில பயணிகள் ரயில் சேவைகள் ரத்தை ஜூன் 16ஆம் தேதி வரை நீட்டித்து தெற்கு ரயில்வேயின் மதுரைக் கோட்டம் உத்தரவிட்டுள்ளது.

அதில், “ஏற்கனவே பயணிகளின் போதிய ஆதரவின்மை காரணமாக சில ரயில்களின் சேவை மே மாத இறுதி வரை ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது அந்த ரயில்களின் சேவை ரத்து ஜூன் 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மே 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்த திருச்சூர், பாலக்காடு, பொள்ளாச்சி, பழனி வழியாக இயக்கப்படும் வண்டி எண் 06343, திருவனந்தபுரம்-மதுரை அமிர்தா சிறப்பு ரயில், ஜூன் 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் வண்டி எண் 06344 மதுரை-திருவனந்தபுரம் அமிர்தா சிறப்பு ரயில், ஜூன் 16ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

மேலும் மே 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்த வண்டி எண் 06105, சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் சிறப்பு ரயில், ஜூன் 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் வண்டி எண் 06106, திருச்செந்தூர்-சென்னை எழும்பூர் செந்தூர் சிறப்பு ரயில் ஜூன் 16ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தொகுதி மக்களுக்காக பச்சை கொடி கட்டிய உதயநிதி

ABOUT THE AUTHOR

...view details