தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயில் டிக்கெட்டில் முறைகேடு செய்த 90 பேர் கைது - மதுரை ரயில்வே கோட்டம் - Madurai district news

கடந்த ஓராண்டில் (2022) மட்டும் மதுரை ரயில்வே கோட்டத்தின் கீழ் 122.85 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே ஆண்டில் மதுரை ரயில்வே கோட்டத்தில் 122.85 கிலோ கஞ்சா பறிமுதல்!
ஒரே ஆண்டில் மதுரை ரயில்வே கோட்டத்தில் 122.85 கிலோ கஞ்சா பறிமுதல்!

By

Published : Jan 26, 2023, 12:18 PM IST

மதுரை:இதுகுறித்து மதுரை ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் எம்.கே.கோபிநாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ரயில்வே சொத்துக்களைப் பாதுகாக்கவும், ரயில் சேவைப் பணிகளுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தடுக்கவும் ரயில்வே பாதுகாப்புப் படை சட்டம் 1957இன் படி, இந்திய அரசு ரயில்வே பாதுகாப்புப் படையை உருவாக்கியது.

ரயில் நிலையங்களில், ரயில்களில் குற்றங்களைத் தடுக்க, பயணிகளைப் பாதுகாக்க, பயணிகள் பாதுகாப்புடன் பயணம் செய்ய, மகளிர் மற்றும் குழந்தை கடத்தலை தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படை பாடுபடுகிறது. மதுரை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை, கடந்த ஆண்டு (2022) மதுரை கோட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.

மதுரை கோட்டத்தில் ரயில் பயணச் சீட்டுகளை முறைகேடாக விற்ற 90 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 15.44 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பயணச் சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தடை செய்யப்பட்ட புகையிலையை ரயிலில் கொண்டு சென்ற 10 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 2.56 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல் போலி மது பாட்டில்கள் கடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 24,477 ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. ரயிலில் 122.85 கிலோ கஞ்சா கடத்திய 8 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 9.79 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

வீட்டில் கோபித்துக் கொண்டு ரயில் நிலையத்தில் சுற்றிய 195 சிறுவர்கள் மற்றும் 35 சிறுமிகள் மீட்கப்பட்டு, அவர்களுடைய பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். ரயில்வே சொத்துகளை அபகரித்த 59 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 4.82 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டன.

ரயில்வே சட்ட விதிகளை மீறிய 2,701 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து அபராதமாக 15.94 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களை அசுத்தப்படுத்திய 4,684 பயணிகளிடம் இருந்து அபராதமாக 9.66 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

ரயில்களில் பயணிகள் தவறவிட்ட 42.45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உடைமைகள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ரயில்களில் பயணம் செய்த 120 பயணிகளுக்கு அவசர மருத்துவ உதவி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:2022-ல் ஓடும் ரயிலில் 209 குழந்தைகள் பிறப்பு - ரயில்வே வெளியிட்ட தகவல்!

ABOUT THE AUTHOR

...view details