தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'க்யூ ஆர்' குறியீடு வசதி அறிமுகம் - தெற்கு ரயில்வே - தெற்கு ரயில்வே

பணமில்லா பரிமாற்றங்களை ஊக்குவிக்கும் விதமாக, தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்களில் 'க்யூ ஆர்' குறியீடு வசதியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

"க்யூ ஆர்" குறியீடு வசதி அறிமுகம் - தெற்கு ரயில்வே
"க்யூ ஆர்" குறியீடு வசதி அறிமுகம் - தெற்கு ரயில்வே

By

Published : Feb 12, 2022, 11:27 AM IST

மதுரை: பணமில்லா பரிமாற்றங்கள், மின்னணு பணம் செலுத்தும் முறைகளை ஊக்குவிக்க தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்களில் 'க்யூ ஆர்' குறியீடை ஸ்கேன் செய்து பயணச்சீட்டு பெறும் வசதியை தெற்கு ரயில்வே ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம், பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்களில் சீசன் டிக்கெட்டுகளையும் புதுப்பித்துக் கொள்ளலாம். தானியங்கி இயந்திரம் மூலமாக அடிக்கடி பயணச்சீட்டு பெறுவோருக்கு ஸ்மார்ட் கார்ட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த கார்டுகளுக்கான பண மதிப்பு பற்று (Cash Value Debit) உள்ளிட்டவற்றையும் 'க்யூ ஆர்' குறியீடை பயன்படுத்தி செய்து கொள்ளலாம்.

முதலில் பயணிகள் தானியங்கி பயணச் சீட்டு இயந்திரத்தில் தங்களது பயண விவரங்களை பதிவு செய்ய வேண்டும். உடனே திரையில் மூன்று வழிமுறைகள் தோன்றும். அவை ரயில்வே ஸ்மார்ட் கார்ட், பேடிஎம் பீம் யூபிஐ க்யூ ஆர் கோட் (Paytm Bhim UPI QR Code), ரீசார்ஜ் வழியாக பணம் செலுத்தும் பீம் யூபிஐ க்யூ ஆர் கோட் (Bhim UPI QR Code) ஆகியவை ஆகும்.

மேலே, குறிப்பிட்ட 'க்யூ ஆர்' கோட் வழிமுறைகளை தேர்வு செய்தால், இயந்திரத்தில் உள்ள திரையில் மற்றொரு 'க்யூ ஆர்' கோட் தோன்றும். அதனை மின்னணு பணபரிமாற்ற வழிமுறைகளான ஜிபே (G-Pay), பேடிஎம் (Paytm), போன்பே (Phonepe) போன்றவற்றின் வாயிலாக ஸ்கேன் செய்து பயணச் சீட்டுக்கான பணம் செலுத்த வேண்டும்.

பணம் செலுத்தியவுடன் இயந்திரத்திலிருந்து பயணச்சீட்டு வெளியே வரும். இயந்திரத்திலுள்ள பகுதியில் ஸ்மார்ட் கார்டு வைத்தவுடன் வரும் ஒரு 'கியூ ஆர்' கோட் மூலம், தேவையான பண மதிப்பை ஸ்மார்ட் கார்டுக்கும் பற்று வைத்துக்கொள்ளலாம்.

இந்த எளிதான, வசதியான 'க்யூ ஆர்' கோட் பயன்பாடு விரைவான சேவையை வழங்கி, பயணிகளின் நீண்ட நேர காத்திருப்பை தவிர்க்கும். இது பற்றிய விளக்கங்கள், மின்னணு பணபரிமாற்ற புகார்கள் ஆகியவற்றை ரயில் மதாத் செயலி, ஒருங்கிணைந்த ரயில்வே உதவி எண் 139 ஆகியவற்றில் தெரிவிக்கலாம் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாடு பாஜக இளைஞர் அணித் தலைவர் வினோஜ் ட்விட் பதிவு தொடர்பான வழக்கு : கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details