மதுரை:இந்தியாவின் பண்பாடு, பாரம்பரியம் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்களைத் தரிசிக்க இந்திய ரயில்வே, பாரத் கௌரவ் சுற்றுலா ரயில்களை இயக்கி வருகிறது. மதுரையில் இருந்து அடுத்த பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் நவம்பர் 18 அன்று இயக்கப்பட இருக்கிறது. இந்த ரயில் காசி, கயா, பூரி, ராமேஸ்வரம் போன்ற சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல இருக்கிறது.
நவம்பர் 18 அன்று புறப்படும் ரயில் திண்டுக்கல், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக முதலில் விஜயவாடா செல்கிறது. பின்பு நவம்பர் 19 அன்று உத்தரப்பிரதேசம், மாணிக்பூர், சித்திரக்கூடம் சென்று நவம்பர் 20 சர்வ ஏகாதசி தினத்தன்று ராம்காட்டில் புனித நீராடி, குப்த கோதாவரி குகை கோயில், காம்தகரி, சதி அனுசுயா கோயில்களில் தரிசனம்.
இதையடுத்து நவம்பர் 21 பிரதோஷ தினத்தன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி ராமஜன்ம பூமி கோயில் தரிசித்து நவம்பர் 22 சிவராத்திரி தினத்தன்று காசி கங்கையில் புனித நீராடி காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி கோயில்களில் தரிசனம்.