மதுரை:தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு காரணமாக தென்மாவட்ட ரயில் நிலையங்களில் பயணச் சீட்டு முன்பதிவு மிகவும் குறைவாகவே இருக்கும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அச்செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமுலில் இருப்பதால், பொது மக்களின் பாதுகாப்பு கருதி பயணச் சீட்டு முன்பதிவு மிகவும் குறைவான அளவில் இருக்கும். இந்நிலையில், அம்பாத்துரை, மதுரை சந்திப்பு, மதுரை மேற்கு நுழைவாயில், ஆழ்வார் திருநகரி, கச்சினாவிளை, கல்லிடைக்குறிச்சி, குரும்பூர், கீழப்புலியூர், பாம்பன், பாளையங்கோட்டை, பேட்டை, ரவணசமுத்திரம், தாதன்குளம் ரயில் நிலையங்களில் உள்ள பயணச் சீட்டு முன்பதிவு வசதி நேற்று (மே.23) வரை செயல்படாது என ஏற்கனவே மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த 13 முன்பதிவு மையங்கள் வரும் மே 30ஆம் தேதி வரை செயல்படாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: +2 மதிப்பெண் அடிப்படையில்தான் மருத்துவப்படிப்பில் சேர்க்கை; அரசு உறுதி