மதுரை: இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ரயில்களை பாதுகாப்பாக இயக்குவதற்காக ரயில் பாதை பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக டிசம்பர் மாதத்தில் ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி மதுரையில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்படும் மதுரை-செங்கோட்டை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06663) மற்றும் செங்கோட்டையிலிருந்து காலை 11.50 மணிக்கு புறப்படும் செங்கோட்டை-மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06664) ஆகியவை டிச.6 மற்றும் 7 ஆகிய நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்படும்.
வரும் டிச.5 முதல் 10 ஆம் தேதி வரை, மதுரை-விழுப்புரம் இடையேயான விரைவு ரயிலானது (16868) மதுரை-திண்டுக்கல் இடையே, பகுதியாக ரத்து செய்யப்படும். அதேபோல மீண்டும், வரும் டிச.12 முதல் 15 ஆம் தேதி வரையிலும் பகுதியாக ரத்து செய்யப்படும்.