மதுரை:தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் - ராமநாதபுரம் ரயில் நிலையங்கள் இடையே இயங்கிவரும் வாராந்திர சிறப்பு ரயில் ஆகஸ்ட் மாதம் இறுதி வாரம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரயில்களின் சேவை செப்டம்பர் மாத இறுதி வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி செகந்திராபாத் - இராமநாதபுரம் சிறப்பு ரயில் (07695) செப்டம்பர் 6, 13, 20, 27 ஆகிய புதன்கிழமைகளில் செகந்திராபாத்தில் இருந்து இரவு 09.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 11.45 மணிக்கு இராமநாதபுரம் வந்து சேரும். மறு மார்க்கத்தில் ராமநாதபுரம் - செகந்திராபாத் சிறப்பு ரயில் (07696) செப்டம்பர் 8, 15, 22, 29 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் ராமநாதபுரத்தில் இருந்து காலை 09.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் சென்று சேரும்.