சென்னை:செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மதுரை வரை மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு மதுரையில் டீசல் இன்ஜின் மாற்றப்படுவது வழக்கம். அதுபோல இன்று அதிகாலை இன்ஜின் மாற்றம்செய்யும் பணி நடைபெற்றது. பொதிகை எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்து வழக்கமான நேரத்திற்கு புறப்பட்டுச்சென்றது.
இந்த ரயிலில் இருந்து கழற்றப்பட்ட மின்சார இன்ஜின் பின்புறமாக பார்சல் ஆபிஸ் அருகே நிறுத்த சென்றபோது 3 சக்கரங்கள் தடம் புரண்டதாகவும்; தடம் புரண்ட இன்ஜினை சரி செய்வதற்காக காலை 07.25 மணி முதல் 20 நிமிடங்களுக்கு மின் பாதையில் உள்ள மின்சாரம் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டது.