தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேல்மருவத்தூர் இருமுடி திருவிழா - பக்தர்களுக்காக தெற்கு ரயில்வே கொடுத்த நல்ல செய்தி!

Melmaruvathur Om Sakthi Temple: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் டிச.1 முதல் ஜன.25 வரை நடைபெறும் இருமுடி திருவிழாவில் கலந்து கொள்ளும் தென் மாவட்ட பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்ல ஏற்பாடு செய்து உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2023, 10:01 PM IST

மதுரை : மேல்மருவத்தூர் ஓம்சக்தி பக்தர்கள் வசதிக்காக தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் அனைத்து ரயில்களும் மேல்மருவத்தூரில் நின்று செல்ல தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் டிசம்பர் 1 முதல் ஜனவரி 25 வரை இருமுடித் திருவிழா நடைபெறுகிறது. எனவே, பயணிகள் வசதிக்காக தென் மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் பல்வேறு விரைவு ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்படி தற்காலிக நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.

மேல்மருவத்தூரில் நின்று செல்லும் ரயில்களின் பட்டியல் விவரம் வருமாறு :

வ.எண் தேதி மேல்மருவத்தூரில் நின்று செல்லும் ரயில்கள்
1. நவம்பர் 30 முதல் ஜனவரி 24 வரை

மதுரை - சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12638)

செங்கோட்டை - சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் (12662)

நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (20692)

கொல்லம் - சென்னை எக்ஸ்பிரஸ் (16102)

நாகர்கோவில் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் (22658)

2. நவம்பர் 30 முதல் ஜனவரி 21 வரை செங்கோட்டை - சென்னை சிலம்பு எக்ஸ்பிரஸ் (20682)
3. டிசம்பர் 1 முதல் ஜனவரி 25 வரை

மதுரை - சென்னை - மதுரை வைகை எக்ஸ்பிரஸ் (12636/12635)

சென்னை - மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12637)

சென்னை - செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் (12661)

தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (20691)

4. டிசம்பர் 1 முதல் ஜனவரி 24 வரை

செங்கோட்டை - தாம்பரம் எக்ஸ்பிரஸ் (20684)

கன்னியாகுமரி - டெல்லி நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12641)

5. டிசம்பர் 3 முதல் ஜனவரி 21 வரை

ராமேஸ்வரம் - அயோத்தியா கண்டோன்மென்ட் சேது சிரத்தா எக்ஸ்பிரஸ் (22613)

பனாரஸ் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (22536)

6. டிசம்பர் 3 முதல் ஜனவரி 23 வரை மதுரை - டெல்லி நிஜாமுதீன் சம்பர்கிரந்தி எக்ஸ்பிரஸ் (12651) 7. நவம்பர் 29 முதல் ஜனவரி 17 வரை அயோத்தியா கண்டோன்மென்ட் - ராமேஸ்வரம் சேது சிரத்தா எக்ஸ்பிரஸ் (22614) 8. நவம்பர் 30 முதல் ஜனவரி 23 வரை டெல்லி நிஜாமுதீன் - மதுரை சம்பர் கிரந்தி எக்ஸ்பிரஸ் (12652) 9. டிசம்பர் 1 முதல் ஜனவரி 19 வரை

நாகர்கோவில் - சென்னை எக்ஸ்பிரஸ் (12668)

மதுரை - மும்பை குர்லா எக்ஸ்பிரஸ் (22102)

புவனேஸ்வர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (20896)

10. டிசம்பர் 1 முதல் ஜனவரி 21 வரை சென்னை - மதுரை எக்ஸ்பிரஸ் (22623) - (தஞ்சாவூர் மெயின் லைன் வழி) 11. டிசம்பர் 1 முதல் ஜனவரி 20 வரை புவனேஸ்வர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (20895) 12. டிசம்பர் 3 முதல் ஜனவரி 24 வரை தாம்பரம் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (22657) 13. டிசம்பர் 3 முதல் ஜனவரி 25 வரை தாம்பரம் - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் (20683) 14. டிசம்பர் 7 முதல் ஜனவரி 25 வரை சென்னை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (12667) 15. டிசம்பர் 6 முதல் ஜனவரி 24 வரை மும்பை குர்லா - மதுரை எக்ஸ்பிரஸ் (22101) 16. டிசம்பர் 6 முதல் ஜனவரி 18 வரை ராமேஸ்வரம் - பனாரஸ் எக்ஸ்பிரஸ் (22535)

மேலே அட்டவணையில் குறிப்பிடப்பட்ட ரயில்கள் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:சென்னை ரயிலில் 100 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு! ரயில் உணவு மோசமா? என்ன காரணம்?

ABOUT THE AUTHOR

...view details