தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 16, 2021, 8:55 AM IST

ETV Bharat / state

ராமேஸ்வரம் - அஜ்மீர் ஹம்சபார் ரயில் மீண்டும் இயக்கம்

ராமேஸ்வரம் - அஜ்மீர் ஹம்சபார் வாராந்திர விரைவு ரயில் ராமேஸ்வரத்திலிருந்து டிசம்பர் 21ஆம் தேதிமுதல் மீண்டும் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

ரயில் செல்லும் காணொலி
ரயில் செல்லும் காணொலி

மதுரை: ராமேஸ்வரம் - அஜ்மீர் ஹம்சபார் வாராந்திர விரைவு ரயிலானது, ராமேஸ்வரத்திலிருந்து டிசம்பர் 21ஆம் தேதிமுதல் மீண்டும் இயக்கப்படவுள்ளது எனத் தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே மதுரைக் கோட்டம் நேற்று செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், "ராமேஸ்வரம் - அஜ்மீர் ஹம்சபார் வாராந்திர விரைவு ரயில் வருகின்ற டிசம்பர் 21ஆம் தேதிமுதல் ராமேஸ்வரத்திலிருந்து இயக்கப்படவுள்ளது.

வண்டி எண் 20973 அஜ்மீர் - ராமேஸ்வரம் ஹம்சபார் வாராந்திர விரைவு ரயிலானது, வருகின்ற டிசம்பர் 18 முதல் அஜ்மீரிலிருந்து சனிக்கிழமைகளில் இரவு 8.10 மணிக்கு புறப்படும். பின்னர் மீண்டும் திங்கள்கிழமைகளில் இரவு 9 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேரும்.

ராமேஸ்வரத்தின் பாம்பன் பாலத்தில் ரயில் செல்லும் காணொலி

மறுமார்க்கத்தில் வண்டி எண் 20974 ராமேஸ்வரம் - அஜ்மீர் ஹம்சபார் வாராந்திர விரைவு ரயிலானது வருகின்ற டிசம்பர் 21ஆம் தேதிமுதல் ராமேஸ்வரத்திலிருந்து செவ்வாய்க்கிழமைகளில் இரவு 10.30 மணிக்குப் புறப்படும். பின்னர் இந்த ரயிலானது வியாழக் கிழமைகளில் இரவு 11.05 மணிக்கு அஜ்மீர் சென்று சேரும்.

இந்த ரயில்கள் மானாமதுரை, திருச்சி, அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை எழும்பூர், கூடுர், நெல்லூர், விஜயவாடா, வாரங்கல், பல்ஹார்ஷா, சந்திராபூர், நாக்பூர், பீட்டல், இட்டார்சி, போபால், தேவாஸ், லட்சுமிபாய் நகர், பதேஹாபாத், ரட்லம் மன்டசோர், நிமாச், சித்தூர்கார், பில்வாரா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று (டிசம்பர் 16) காலை 8 மணிக்கு தொடங்கும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வள்ளுவக்குடி விஏஓ பணி மாற்றத்தைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

ABOUT THE AUTHOR

...view details