மதுரை:நவராத்திரி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அந்த வகையில்தாம்பரம் முதல் நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில் (06001) புதன்கிழமை அன்று தாம்பரத்திலிருந்து செப்டம்பர் 30 ஆம் தேதி மற்றும் அக்டோபர் 21 ஆம் தேதி ஆகிய வெள்ளிக்கிழமைகளில் இரவு 07.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.10 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். மறுமார்க்கத்தில் நாகர்கோவில் முதல் தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் (06002) அக்டோபர் 5 ஆம் தேதி புதன்கிழமை அன்று நாகர்கோவிலிருந்து மாலை 04.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
நாகர்கோவில் முதல் தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் (06040) அக்டோபர் 25 ஆம் தேதி செவ்வாய் கிழமை அன்று நாகர்கோவிலிருந்து மாலை 03.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.