தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 7, 2022, 8:31 PM IST

ETV Bharat / state

பண்டிகை கால நெரிசலை சமாளிக்க திருநெல்வேலி, தாம்பரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு - தெற்கு ரயில்வே அறிவிப்பு

பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்கும் விதமாக திருநெல்வேலி முதல் தாம்பரம் சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே நீட்டிப்பு செய்துள்ளது.

பண்டிகை கால நெரிசலை சமாளிக்க திருநெல்வேலி, தாம்பரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு...தெற்கு ரயில்வே அறிவிப்பு
பண்டிகை கால நெரிசலை சமாளிக்க திருநெல்வேலி, தாம்பரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு...தெற்கு ரயில்வே அறிவிப்பு

மதுரை:பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க அம்பாசமுத்திரம், ராஜபாளையம், மதுரை வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி முதல் தாம்பரம் வாராந்திர சிறப்புக்கட்டண ரயிலின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி முதல் தாம்பரம் வாராந்திர சிறப்புக்கட்டண ரயில் (06004) திருநெல்வேலியில் இருந்து செப்டம்பர் 18 முதல் ஜனவரி 29 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 07.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 09.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் தாம்பரம் முதல் திருநெல்வேலி வாராந்திர சிறப்புக்கட்டண ரயில் (06003) தாம்பரத்திலிருந்து செப்டம்பர் 19 முதல் ஜனவரி 30 வரை திங்கட்கிழமைகளில் இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.40 மணிக்கு திருநெல்வேலி வந்துசேரும்.

இந்த ரயில்களுக்கான முன் பதிவு நாளை (08.9.2022) காலை 08.00 மணிக்குத் தொடங்குகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:BSF பெயரில் உருவாக்கப்பட்ட போலி ட்விட்டர் கணக்கு 24 மணிநேரத்திற்குள் நீக்கம்

ABOUT THE AUTHOR

...view details