தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பயணிகள் ஆதரவின்மையால் மேலும் சில ரயில்கள் ரத்து - southern-railway cancel Train

பயணிகளின் போதுமான ஆதரவின்மை காரணமாக, மேலும் சில ரயில்களை ஜுன் 16ஆம் தேதி வரை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பயணிகள் ஆதரவின்மையால் மேலும் சில ரயில்கள் ரத்து
பயணிகள் ஆதரவின்மையால் மேலும் சில ரயில்கள் ரத்து

By

Published : May 25, 2021, 9:49 PM IST

இதுகுறித்து இன்று (மே.25) தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, "பயணிகளின் போதிய ஆதரவின்மை காரணமாக, சில ரயில்கள் ஜூன் 1ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த ரயில்களின் சேவை மேலும் 15 நாட்களுக்கு ரத்து நீட்டிப்பு செய்யப்படுகிறது.

மே 31ஆம் தேதி வரை, தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த வண்டி எண் 06191 தாம்பரம் - நாகர்கோயில் சிறப்பு ரயில் ஜுன் 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. அதேபோல ஜுன் 1 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த வண்டி எண் 06192 நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில் ஜுன் 16 வரை ரத்து செய்யப்படுகிறது.

ஜுன் 31 வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த வண்டி எண் 06791 திருநெல்வேலி - பாலக்காடு சிறப்பு ரயில் ஜுன் 15 வரை ரத்து செய்யப்படுகிறது.

பயணிகள் ஆதரவின்மையால் மேலும் சில ரயில்கள் ரத்து
அதேபோல ஜுன் 1 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த வண்டி எண் 06792 பாலக்காடு - திருநெல்வேலி சிறப்பு ரயில் ஜுன் 16 வரை ரத்து செய்யப்படுகிறது. மேலும் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - மங்களூரு, கொச்சுவேலி - மைசூரு, திருவனந்தபுரம் - மங்களூரு, டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களின் சேவை ஜுன் 16 வரை ரத்து செய்யப்படுகிறது"எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details