பயணிகள் வருகை குறைவு காரணமாக பல்வேறு ரயில்கள் மே 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த ரத்தானது ஜுன் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக நேற்று (மே.26) அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ரத்து நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட இரண்டு ரயில்களும், மீண்டும் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் சில ரயில்கள் பகுதி அளவாக இயக்கப்படும் எனவும், இரு ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுகுறித்த விவரங்கள் பின்வருமாறு:
1. சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம், மங்களூரு சென்ட்ரல் - நாகர்கோவில் ஆகிய இரு ரயில்களும் இருமருங்கிலும் இயக்கப்படும். இதன்மூலம் ரத்து நடவடிக்கை நீக்கப்பட்டுள்ளது.
2.மதுரை - புனலூர் ரயில் பகுதி அளவில் ரத்து செய்யப்பட்டு திருவனந்தபுரத்துடன் நிறுத்தப்படுகிறது. அதேபோல புனலூருக்கு பதிலாக திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை வரை சிறப்பு ரயில் இயக்கப்பட இருக்கின்றது.