மதுரை:பாம்பன் ரயில் பாலத்தில் நடைபெறும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, முன்னதாக டிசம்பர் 30ஆம் தேதி வரை ரயில் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அங்கு ஜனவரி 10ஆம் தேதி வரை போக்குவரத்து ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
வழக்கத்துக்கு மாறாக பாம்பன் ரயில் பாலத்தில் எச்சரிக்கை மணியோசை ஒலித்ததால் வருகின்ற ஜனவரி 10ஆம் தேதி வரை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.