தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை - டெல்லி நிஜாமுதீன் ரயில் திண்டுக்கல் வரை இயக்கம் - தெற்கு ரயில்வே - dindigul railway station

இரட்டை ரயில் பாதை பணிகள் காரணமாக மதுரை - டெல்லி நிஜாமுதீன் விரைவு ரயில், திண்டுக்கல் வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 11, 2023, 11:42 AM IST

Updated : Feb 11, 2023, 11:58 AM IST

மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, பல்வேறு ரயில்களின் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் - மதுரை இடையே இயங்கும் தேஜஸ் விரைவு ரயில், சென்னை எழும்பூர் - மதுரை இடையே இயக்கப்படும் வைகை, பாண்டியன் விரைவு ரயில்கள், சென்னை எழும்பூர் - செங்கோட்டை இடையே இயங்கும் பொதிகை விரைவு ரயில் உள்ளிட்ட ரயில்கள் குறிப்பிட்ட நாட்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒரு சில ரயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மதுரை ரயில் நிலையத்தில் இரட்டை ரயில் பாதை பணிகளுக்காக பிப்ரவரி 19, 21, 26, 28 ஆகிய நாட்களில் மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை - நிஜாமுதீன் சம்பர்கிரந்தி விரைவு ரயில் (12651) மற்றும் பிப்ரவரி 14, 16, 21,23 ஆகிய நாட்களில் டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய டெல்லி நிஜாமுதீன் - மதுரை சம்பர்கிரந்தி விரைவு ரயில் (12652) மதுரை - விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த ரயிலை திண்டுக்கல் வரையாவது இயக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட தெற்கு ரயில்வே நிர்வாகம், மதுரை - டெல்லி நிஜாமுதீன் சம்பர்கிரந்தி விரைவு ரயில் திண்டுக்கல்-மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. மேற்குறிப்பிட்ட நாட்களில் இந்த ரயில் திண்டுக்கலில் இருந்து நிஜாமுதீனுக்கும், மதுரையில் இருந்து திண்டுக்கல் வரைக்கும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: லேடீஸ் ஹாஸ்டல் பெண்களே உஷார்.. ஐடி ஆபிசர் போல் நடித்து சுருட்டிய பலே பெண்!

Last Updated : Feb 11, 2023, 11:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details