தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிறிஸ்துமஸ் தினத்தன்று கன்னியாகுமரியிலிருந்து மதுரை வழியாகச் சென்னைக்குச் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

Special train announcement for Christmas: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்டத்தைச் சமாளிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை வழியாகச் சென்னைக்குச் சிறப்பு ரயில் இயக்கவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

southern-railway-announced-special-train-for-christmas-from-kannyakumari-to-chennai
கிறிஸ்துமஸ் தினத்தன்று மதுரை வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 23, 2023, 8:19 PM IST

மதுரை: பண்டிகையைக் கால விடுமுறைகளை முன்னிட்டு பயணிகளின் வசதி கருதிக் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் விதமாக, கிறிஸ்துமஸ் தினத்தன்று சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "பண்டிகை கால கூட்ட நெரிசலைச் சமாளிக்க டிசம்பர் 25ஆம் தேதி அன்று மதுரை வழியாக நாகர்கோவிலிலிருந்து சென்னைக்குச் சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, நாகர்கோவில் - டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் ஒரு வழி சிறப்பு ரயில் (06046) நாகர்கோவிலிலிருந்து டிசம்பர் 25 ஆம் தேதி அன்று இரவு 11.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 12.15 மணிக்குச் சென்னை சென்றடையும். இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயிலில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 5 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி ஆகியவை இணைக்கப்படும். ‌ இந்த ரயிலுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது" என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, பராமரிப்பு பணிகளுக்காக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கன்னியாகுமரி - டெல்லி நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் வழக்கம் போல் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில், "ஜனவரி 10, 12, 17, 19, 24, 26, 31 மற்றும் பிப்ரவரி 2 ஆம் தேதி ஆகிய நாட்களில் கன்னியாகுமரியிலிருந்து புறப்பட வேண்டிய கன்னியாகுமரி - டெல்லி நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் (12641) மற்றும் மறு மார்க்கத்தில் ஜனவரி 13, 15, 20, 22, 27, 29 மற்றும் பிப்ரவரி 3, 5 ஆகிய நாட்களில் டெல்லியிலிருந்து புறப்பட வேண்டிய டெல்லி நிஜாமுதீன் - கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் (12642) ஆகியவை வழக்கம்போல் இயங்கும்.

இந்த ரயில்கள், வடக்கு ரயில்வே ஆக்ரா கோட்டத்தில் உள்ள மதுரா ரயில் நிலையம் மற்றும் மதுரா - பல்வால் ரயில் நிலையப் பிரிவில் ரயில் பாதை மற்றும் சைகை (Signal) மேம்பாட்டுப் பணிகளுக்காக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது நீடிக்கும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கிறிஸ்துமஸ் விடுமுறை.. சென்னை விமான நிலையத்தில் குவியும் பயணிகள்!

ABOUT THE AUTHOR

...view details