தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகளுக்கு 2ஆவது திருமணம்: ரஜினிக்கு பெரியாரின் செயலை நினைவூட்டும் செல்லூர் ராஜு! - Selur Raju talks about Rajini

மதுரை: ரஜினி மீது தங்களுக்கு எந்த மனவருத்தமும் கிடையாது என்றும், மாபெரும் தலைவரின் போராட்டத்தை, பெருமையை சீர்குலைப்பது போன்று பேசுவது தவறானது எனவும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

Rajini
Rajini

By

Published : Jan 24, 2020, 11:30 AM IST

மதுரை மாவட்டம் ஊரக வளர்ச்சி சார்பில் ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமினை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், ”எப்பொழுதும் பொறுமையாகப் பேசும் ரஜினியை யாரோ தவறாக வழி நடத்துகிறார்கள். 50 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவத்தை ரஜினி பேச வேண்டிய அவசியம் என்ன? ரஜினி மீது எங்களுக்கு எந்த மனவருத்தமும் கிடையாது.

செல்லூர் ராஜு - கூட்டுறவுத் துறை அமைச்சர்

மாபெரும் தலைவரின் போராட்டத்தை, பெருமையை சீர்குலைத்துப் பேசுவது தவறானது. ரஜினியின் மகளுக்கு இரண்டாவது திருமணம் நடந்துள்ளது; இது எல்லாம் அந்தக் காலத்தில் சாத்தியமில்லை. மதவழிப்பாட்டை நாங்களும்தான் பின்பற்றுகிறோம். ஆனால், பத்தாம்பசலித்தனமாகச் செயல்படக்கூடாது” என்றார்.

இதையும் படிங்க: ‘யோக்கியர் என்றால் துக்ளக் ஆதாரத்தைக் காட்டியிருக்க வேண்டும்’ - கொளத்தூர் மணி காட்டம்

ABOUT THE AUTHOR

...view details