தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராணுவ வீரரின் உடல் மதுரை விமான நிலையம் வருகை: மாவட்ட ஆட்சியர் இறுதி மரியாதை - மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த மதுரை ஆட்சியர் அன்பழகன்

மதுரை: விபத்தில் உயிரிழந்ததாக மதுரை விமான நிலையம் கொண்டு வரப்பட்ட ராணுவ வீரரின் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

ராணுவ வீரர் உடல் மதுரை விமான நிலையம் வருகை: மாவட்ட ஆட்சியர் இறுதி மரியாதை
ராணுவ வீரர் உடல் மதுரை விமான நிலையம் வருகை: மாவட்ட ஆட்சியர் இறுதி மரியாதை

By

Published : Nov 22, 2020, 5:21 PM IST

Updated : Nov 22, 2020, 6:00 PM IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் சண்முகா நகரைச் சேர்ந்த கந்தசாமி மகன் கருப்பசாமி (34). இவர் கடந்த 14 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் 6ஆவது பீரங்கி படையில் பணியாற்றி வந்தார். இதனிடையே லடாக் பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்பு பணியின் போது, ஏற்பட்ட விபத்தில் கருப்பசாமி மரணம் அடைந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து கருப்பசாமியின் குடும்பத்திற்கு ராணுவத்தில் இருந்து தகவல் அளிக்கப்பட்டது. மேலும் கருப்பசாமிக்கு திருமணமாகி தமயந்தி என்ற மனைவியும், கன்யா, வைஷ்ணவி என்ற 2 மகள்களும், பிரதீப்ராஜ் என்ற மகனும் உள்ளனர்.
2 மாத விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த கருப்பசாமி கடந்த பிப்ரவரி மாதம் தான் மீண்டும் பணிக்குத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராணுவ வீரரின் உடலுக்கு இறுதி மரியாதை செய்யும் நிகழ்வு
இந்நிலையில் மதுரை கொண்டுவரப்பட்ட உயிரிழந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மாநகராட்சி ஆணையாளர் விசாகன், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார், விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவன் மற்றும் தேசிய மாணவர் படை கமாண்டர் கர்னல் ரவிகுமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ராணுவ வீரரின் உடல் மதுரை விமான நிலையம் வருகை: மாவட்ட ஆட்சியர் இறுதி மரியாதை

மேலும் விருதுநகர் மாவட்ட ராணுவ வீரர்கள் குழு சார்பில் ராணுவ வீரரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையும் படிங்க: வீரமரணமடைந்த தெலங்கானா வீரருக்கு இறுதிச்சடங்கு!

Last Updated : Nov 22, 2020, 6:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details