தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்க வேண்டும்: சமூக போராளி நந்தினி - மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை: வாக்கு எண்ணிக்கையை உடனடியாக தொடங்க வேண்டும் என சமூக போராளி நந்தினி தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்க வேண்டும்
வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்க வேண்டும்

By

Published : Apr 17, 2021, 5:00 PM IST

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது தந்தை ஆனந்தனுடன் இணைந்து சமூக போராளி நந்தினி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் வாக்கு எண்ணிக்கையை உடனே தொடங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பின்னர் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் நந்தினி கூறியதாவது, "வாக்கு எண்ணிக்கை மையங்களில் எந்தவித பாதுகாப்பும் கிடையாது. தற்போது தேர்தல் முடிவடைந்து பத்து நாள்கள் ஆகின்றன. நிறைய இடங்களில் மோசடிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை. வாக்கு இயந்திரங்களை மாற்றுவதற்கான சூழல் தமிழ்நாடு முழுவதும் நிலவுகிறது. வாக்கு எண்ணிக்கைக்கு 15 நாட்கள் மட்டுமே உள்ளன.

வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்க வேண்டும்

இந்த இடைப்பட்ட காலத்தில் என்னென்ன முறைகேடுகளில் ஈடுபடுவார்கள் என்பது தெரியவில்லை. பிற மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் இங்கு நடைபெறுகின்ற தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது நாடாளுமன்ற தேர்தலும் கிடையாது.

அந்தந்த மாநிலங்களில் மக்கள் வாக்களிக்கிறார்கள், தங்களுக்குரிய பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆகையால், இங்கு வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைப்பது நியாயமில்லை. இதில் முறைகேடு செய்வதற்காகவே இவ்வாறு செய்கிறார்கள்.

இதனை வன்மையாக கண்டிக்கிறோம். வாக்கு எண்ணிக்கையை உடனடியாக தொடங்க வேண்டும். ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம், ஆனால் மக்கள் வாக்களித்தவர்கள் தான் வரவேண்டும். வாக்கு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்து வரக்கூடாது" என்றார்.

இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கை: இந்திய, தமிழ்நாடு தேர்தல் அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம்

ABOUT THE AUTHOR

...view details