தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Pay and take shop: மதுரையில் நேர்மையை விதைக்கும் மளிகைக் கடைக்காரர் - The shop where the customer puts the coin in the box

தங்களுக்குத் தேவையான பொருள்களை எடுத்துக் கொண்டு அதற்குரிய விலையை கல்லாப்பெட்டியில் போட்டுவிடுங்கள் என்று வாடிக்கையாளர்களிடம் நேர்மைப் பண்பை விதைக்கிறார், மதுரையைச் சேர்ந்த மளிகைக் கடைக்காரர், சின்மயானந்தம்.

நன்னெறிக்கடை
நன்னெறிக்கடை

By

Published : Nov 26, 2021, 7:51 PM IST

மதுரை:அண்ணாநகரில் கோழி இறைச்சிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார், சின்மயானந்தம் என்ற சமூக ஆர்வலர்.

இவர் தனது இறைச்சிக்கடை அருகே நன்னெறிக்கடை என்ற பெயரில் பொதுமக்களுக்குத் தேவையான பலசரக்கு கடை ஒன்றை இன்று (நவ.26) தொடங்கியுள்ளார்.

மசாலாப் பொடிகள், இயற்கை மூலிகைப் பொருள்கள், முட்டை, டீத்தூள் உள்ளிட்ட பொருள்களை விற்பனைக்கு வைத்துள்ளார்.

நன்னெறிக்கடை

ஒவ்வொரு பொருள் மீது அதன் விற்பனை விலை எழுதப்பட்டுள்ளது. கடைக்கு வருகின்ற வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை எடுத்துக் கொண்டு, அருகே வைக்கப்பட்டுள்ள கல்லாப்பெட்டியில் பொருள்களுக்கான தொகையை வைத்துவிட்டுச் செல்கின்றனர்.

இதுகுறித்து சின்மயானந்தம் கூறுகையில், "பொதுமக்களிடம் நேர்மைப் பண்பை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நன்னெறிக்கடையை தொடங்கியுள்ளேன்.

அவர்கள் தங்களது சமூகப் பொறுப்பை நிரூபிக்க நல்ல வாய்ப்பாக இதனைக் கருதுகிறேன்" என்றார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டை சர்வதேச தகவல் தொழில்நுட்ப சேவை மையமாக மாற்ற வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details