2020ஆம் ஆண்டு மஞ்சுவிரட்டை காண மோடி வரவேண்டும்! - முகிலன் - மஞ்சுவிரட்டை காண மோடி வரவேண்டும்
மதுரை: 2020ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மஞ்சுவிரட்டுப் போட்டியை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தால் மகிழ்ச்சி என சமூக செயற்பாட்டாளர் முகிலன் தெரிவித்துள்ளார்.
முகிலன் பேட்டி
இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகளின் பட்டியலில் இருந்து காளையை நீக்கி விட்டு மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண பிரதமர் மோடி வர வேண்டும். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நீதிமன்ற விசாரணை என்ற பெயரில் அலைகழிக்கப்படுகின்றனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக போராடியவர்களை காவல்துறையை வைத்து ஆட்சியாளர்கள் எப்படி நடத்தினார்கள் என்பதை சுட்டிக்காட்டி தண்டனை வழங்க குரல் கொடுக்க வேண்டும். தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்ட கர்நாடகா அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனால் தமிழ்நாடு உரிமை இழந்த மாநிலமாக மாறி வருகிறது, இவ்வாறு கூறினார்.