மதுரை மாநகரில் மக்கள் மிக அதிகம் வாழும் பகுதிகளில் குறிப்பிடத்தக்க பகுதி செல்லூர் ஆகும். வைகையாற்றின் வடக்கரையில் அமைந்துள்ள செல்லூர் பெரும்பாலும் நெசவாளர், விவசாயக் கூலிகளைக் கொண்டது.
நேற்று ஒரே நாளில் இங்கு மட்டும் ஆறு பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
செல்லூரை ஒட்டிய நரிமேடு ஏற்கனவே கட்டுப்படுத்தப்பட்டப் பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், செல்லூரில் அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள தொற்று அப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக செல்லூர் விவேகானந்தர் தெருவில் மட்டும் நான்கு பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தவிர போஸ்வீதி, மணவாள நகர் பகுதிகளில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது மதுரை மாநகராட்சி, சுகாதாரத் துறை இணைந்து இப்பகுதிகளில் கிருமி நாசினிகளைத் தெளிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் செல்லூர் பகுதியில் ஏறக்குறைய முக்கால்வாசி தெருக்களை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து, காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
ஒரே நாளில் 6 பேருக்கு கரோனா தொற்று இதையும் படிங்க... ஜகஜீவன் மருத்துவமனை ஊழியர்கள் 57 பேருக்கு கரோனா!