மதுரை நத்தம் பகுதியில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் தூண்கள் அமைக்க சாலையோரத்தில் இரும்பு கம்பிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இக்கம்பிகளில் சிலவற்றை மதுரை ஊமச்சிகுளம் அம்பேத்கர் தெருவில் வசிக்கும் பால்பாண்டி, வேலு, ஆறுமுகம், பாண்டி, கார்த்திக், மலைச்சாமி ஆகிய ஆறு பேர் அவ்வப்போது திருடி விற்று வந்துள்ளனர்.
இதனையறிந்த சிலர், ஊமச்சிகுளம் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து ஊமச்சிகுளம் தனிப்படை காவல் துறையினர், அவர்கள் ஆறு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஆறு பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் கட்டிட தொழிலாளர்கள் என்ற பேரில் தனியாகவுள்ள வீடுகளில் தங்க நகைகளைத் திருடிவந்ததும் தெரியவந்தது.