சினிமா நட்சத்திரங்களுக்காக, பால் , போஸ்டர் போன்ற பொருட்களுக்காக பணத்தை செலவிடுவது ரசிகர்கள் மத்தியில் சகஜமான ஒன்றாக மாறி விட்டது. அனால், இதற்கு மாறாக மதுரை மாவட்ட சிம்பு ரசிகர்கள், திரையுலகத்திற்கு நடிகர் சிம்பு வந்து 35 ஆண்டுகள் முடிந்ததை கொண்டாடும் வகையில், மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் அவரது ரசிகர்கள் 500 அடி நீள போஸ்டரை சுவற்றில் ஒட்டியுள்ளனர். இவர்கள், 'மதுரை சிட்டி STR வெறியர்கள்' என்ற பெயரில் ரசிகர் மன்றம் நடத்தி வருகின்றனர்.
500 அடிக்கு போஸ்டர் அடித்த சிம்பு ரசிகர்கள்! - poster
மதுரை: மாட்டுத்தாவணி பகுதியில் சிம்பு ரசிகர் மன்றம் சார்பில், சிம்புவின் திரையுலக பயணத்தை கொண்டாடும் வகையில் 500 அடி நீள போஸ்டரை சுவற்றில் ஒட்டியுள்ளனர்.
500 அடிக்கு போஸ்டர் அடித்த சிம்பு ரசிகர்கள்!
இதுபற்றி, ரசிகர் மன்ற நிர்வாகிகள் வினோத், அன்பு கூறுகையில் ; ரசிகர் மன்றம் சார்பில் மக்களுக்கு பல நல்ல உதவிகளைச் செய்து வருகிறோம். சிம்புவின் 35 ஆண்டு கால சாதனையைக் கொண்டாடும் வகையில் சிம்புவுக்காக முதல் முறையாக 500 அடி நீள போஸ்டர் ஒட்டியுள்ளோம்' என்றார்.