தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தடுப்பூசி தட்டுப்பாடு: பொதுமக்கள் முற்றுகை போராட்டம்! - shortage news

மதுரை: கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பல்வேறு சிகிச்சை மையங்களில் பொதுமக்கள் மருத்துவப் பணியாளர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தடுப்பூசி மையங்களில் தட்டுப்பாடு - பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
தடுப்பூசி மையங்களில் தட்டுப்பாடு - பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

By

Published : Jun 15, 2021, 3:37 AM IST

மதுரை மாவட்டத்தில் நேற்று (ஜூன். 14) 38 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மதுரை செனாய்நகர் இளங்கோ பள்ளியில் அமைக்கப்பட்ட கரோனா தடுப்பூசி மையத்தில் காலை முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் கூடினர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்த நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

தற்போது, குறைந்த அளவிலேயே தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்திருந்த நிலையில் அங்கு ஏராளமானோர் குவிந்தனர். இதனையடுத்து, தங்கள் பெயரை முதலில் பதிய வேண்டுமென மருத்துவப் பணியாளர்களை ஏராளமான பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

பொதுமக்களில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாததால், அங்கு கரோனா பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டு கூட்டத்தை கலைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details