மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2018ஆம் ஆண்டு கடைகளில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனால், கோவிலின் உள்ளே கடைகள் அடைக்கப்பட்டன.
கடைகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் கோவிலின் உள்ளே உள்ள சிற்பங்களின் கலைநயத்தை மறைக்கும் வண்ணம் அமைந்திருந்தது.
இதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம் ஊழியர்கள், காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் உதவியுடன் மூடிய கடைகளில் உள்ள பொருட்களை அகற்றியது. இன்று மொத்தமாக 53 கடைகள் அகற்றப்பட்டன.
மீனாட்சி அம்மன் கோவில் சன்னதியிலுள்ள கடைகள் அகற்றம் - meenakshi amman temple
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள அம்மன் சன்னதி பகுதியில் செயல்பட்டு வந்த கடைகள் இன்று அகற்றப்பட்டன
மீனாட்சி அம்மன் கோவில் சன்னதியிலுள்ள கடைகள் அகற்றம்