உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குப் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இக்கோயிலைச் சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் ஆயிரக்கணக்கான கடைகள் அமைந்துள்ளன.
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குப் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இக்கோயிலைச் சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் ஆயிரக்கணக்கான கடைகள் அமைந்துள்ளன.
நடைபாதையில் கடைகள் இருப்பதால், கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பக்தர்களுக்கு இடையூறாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நடைபாதை கடைகள் உள்ளிட்டப் பெரிய கடைகளை அகற்றக்கோரி மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில், கோயிலைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அலுவலர்கள் இன்று (அக்.21) அப்புறப்படுத்தினர். இதற்குப் பக்தர்கள் பலரும் மாநகராட்சி அலுவலர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:மீனாட்சியம்மன் கோயில் காலண்டர் அச்சடிக்க மறு டெண்டர்: கோயில் நிர்வாகம் அறிவிப்பு