மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் வளாகத்தில் 500-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கிவந்தன. இதற்கிடையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு கோபுர வாயில் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோயிலுக்குள் உள்ள வீர வசந்தராயர் மண்டபம் முழுவதும் எரிந்து நாசமானது.
இதைத்தொடர்ந்து கோயிலுக்குள் இயங்கிவந்த அனைத்துக் கடைகளையும் மூடுவதற்கு கோயில் நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடை உரிமையாளர்கள் இந்து சமய அறநிலையத் துறை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
ஆனால் அதற்கு இடையில் கரோனா ஊரடங்கு காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது கோயில்கள் ஐந்து மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டதால் இந்த நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டது.