ரயில்வே வாரிய நிதி மேலாண்மை உறுப்பினர் நரேஷ் சலேச்சா கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 18) இரவு மதுரை ரயில் நிலையத்தில் பயணிகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தண்ணீர் பாட்டிலுக்கு ரசீது தராத கடைக்காரர் - கண்டித்த ரயில்வே வாரிய உறுப்பினர் - Naresh Salecha
மதுரை: தண்ணீர் பாட்டிலுக்கு ரசீது தராத கடைக்காரரை ரயில்வே வாரிய உறுப்பினர் கண்டித்தார்.
ரயில் நிலையத்தில் உள்ள உணவு கடைகளையும் ஆய்வு செய்தார். அப்போது ஒரு பெண்மணி தண்ணீர் பாட்டில் வாங்கினார். அவருக்கு கடைக்காரர் ரசீது கொடுக்கவில்லை. உடனே கடையின் அருகில் உள்ள "ரசீது இல்லையென்றால் உணவு இலவசம்" என்ற விளம்பரத்தை சுட்டிக்காட்டி கடைக்காரரை கண்டித்து பெண்மணி செலுத்திய தண்ணீர் பாட்டிலுக்கான கட்டணத்தை திருப்பி கொடுக்க வைத்தார்.
மேலும் மதுரை ரயில் நிலையத்தில் உள்ள காத்திருப்போர் அறைகள், உணவு கடைகள், நடைமேடை, ரயில் நிலைய பாதுகாப்பு சிசிடிவி கேமரா ஏற்பாடுகளையும் பார்வையிட்ட அவர், மதுரை ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் சம்பந்தமாக ரயில்வே நில மேம்பாட்டு ஆணைய அலுவலர்களுடன் அது சம்பந்தமான வரைபடங்களையும் ஆய்வு செய்து ஆலோசனையும் நடத்தினார்