தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீண்டாமை விவகாரம்: தலைமறைவாகவுள்ள நபர் சரணடைவதை ஏற்ற நீதிமன்றம் - வன்கொடுமை

பெட்டிக்கடையில் சிறுவர்கள் சிலர் தின்பண்டங்கள் வாங்கச்சென்ற போது ஊர் கட்டுப்பாடு காரணமாக, தின்பண்டம் வாங்க வரக்கூடாது எனக் கூறிய விவகாரத்தில், தலைமறைவாகவுள்ள முருகன் சரண் அடைவதை நீதிமன்றம் ஏற்றது.

சிறுவர்களுக்கு திண்பண்டங்கள் விற்க மறுத்த பெட்டிக் கடைக்காரர் கைது
சிறுவர்களுக்கு திண்பண்டங்கள் விற்க மறுத்த பெட்டிக் கடைக்காரர் கைது

By

Published : Oct 7, 2022, 3:50 PM IST

தென்காசி: பாஞ்சாகுளம் கிராமத்தில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் சிறுவர்கள் சிலர் தின்பண்டங்கள் வாங்கச் சென்றனர். ஊர் கட்டுப்பாடு காரணமாக தின்பண்டம் வாங்க வரக்கூடாது எனவும்; வீட்டில் போய் சொல்லுங்கள் எனவும் கூறிய கடைக்காரர் சிறுவர்களுக்கு தின்பண்டம் தர மறுத்தார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார், பெட்டிக்கடை உரிமையாளர் மகேஸ்வரன்(40), ராமச்சந்திரன்(22), சுதா ஆகியோரை கைது செய்தனர். இவ்விவகாரத்தில் தொடர்புடைய முருகன் தலைமறைவாக உள்ளார். இந்த வழக்கில் இவர்களது ஜாமீன் மனு நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தள்ளுபடியானது.

இதையடுத்து இவர்கள் தங்களுக்கு ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர். இதேபோல் முருகன் சரணடைவதை ஏற்கக்கோரியும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை நீதிபதி தமிழ்செல்வி விசாரித்தார்.

அரசு தரப்பில், புகார்தாரரின் கருத்தை அறியாமல் ஜாமீன் வழங்கக்கூடாது. பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் எனவும் கூறப்பட்டது. பாதிக்கப்பட்டோர் தரப்பில், இன்னும் கிராமத்தில் புறக்கணிப்பு தொடர்கிறது. பாதிக்கப்பட்டோருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் ஜாமீன் வழங்கக்கூடாது என்ற இடையீட்டு மனுவை ஏற்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, ஜாமீன் மனுவிற்குப்பதிலளிக்க அவகாசம் அளித்து விசாரணையை அக்.12க்கு தள்ளி வைத்தார். முருகன் சரணடைவதை விசாரணை நீதிமன்றம் ஏற்று, அவரது மனு மீது முன்னுரிமை அடிப்படையில் உத்தரவிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details