மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள கொடிமங்கலம் பகுதியில் சுமார் 2500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதிக்குத் தேவையான மின்சாரம் நாகமலை புதுக்கோட்டை துணைமின் நிலையத்திலிருந்து விநியோகம்செய்யப்படுகின்றது.
இப்பகுதிக்கு கடந்த 10 ஆண்டுகளாக வீடுகளுக்கு குறைந்த அழுத்த மின்சாரம் மட்டுமே வருவதால் வீட்டிலிருக்கும் மின் சாதன பொருள்களான தொலைக்காட்சி, மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி போன்றவற்றை இரவு நேரங்களில் இயக்க முடியாத நிலை உள்ளது. மேலும் குடிநீர் மேல்நிலைத் தொட்டிக்கு மின் மோட்டாரை இயக்கவும் முடியாமல்போவதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
10 ஆண்டுகளாக இரவில் தவிக்கும் கொடி மங்கலம் வாசிகள் மின் சாதன பொருள்களை இயக்கினால் அடிக்கடி பழுதாகி கோளாறு ஏற்படுவதால் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தற்போது 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடப்பதால் இந்தக் குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின் பொருள்கள் இயங்காததால் அப்பகுதியினர் அவதியடைந்துவருகின்றனர்.
இந்தச் சூழலில் பொதுமக்கள் அப்பகுதியில் புதிய மின்மாற்றி அமைத்துக் கொடுத்து மின்சாரத்தைச் சீராக வழங்க மின் துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கைவைத்துள்ளனர்.
இதையும் படிங்க:அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல்: தகவல் தந்தால் சன்மானம்