மதுரை, சொக்கிகுளத்தில் உள்ள பூச்சியியல் ஆராய்ச்சி மையம் கடந்த 32 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் கொசுக்கள், அதனால் பரவும் நோய்கள், கட்டுப்படுத்தும் முறைகள் குறித்த ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
பூச்சியியல் ஆய்வு மைய மாற்றம்: ஆவணங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு - பூச்சியியல் ஆய்வு மையம்
மதுரை: பூச்சியியல் ஆராய்ச்சி மையத்தை இடம் மாற்றுவது குறித்த ஆவணங்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இம்மையத்தை புதுச்சேரிக்கு மாற்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சி இயக்குநர் ஜெனரல் உத்தரவிட்டுள்ளார். இதனால் தமிழ்நாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும், மையத்தை புதுவைக்கு மாற்றும் உத்தரவை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் மதுரையிலுள்ள பூச்சியியல் ஆராய்ச்சி மையத்தை புதுச்சேரிக்கு மாற்றுவது தொடர்பான அரசின் முடிவு குறித்த ஆவணங்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.