மதுரை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மகள் குறித்தும், நடிகர் விஜய்சேதுபதியின் மகள் குறித்தும் வக்கிரமான மனநிலையில் சமூக வலைதளங்களில் பதிவுகள் இடப்பட்டன.
இதுதொடர்பாக, சைபர் காவல்துறையிடம் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மதுரையில் இந்திய மாணவர்கள் சங்கத்தினர் நடத்திய போராட்டம் இந்நிலையில், கிரிக்கெட் வீரர்கள், திரைக்கலைஞர்களின் மகள்கள் மீதும், குறிப்பிட்ட வழக்குகளில் வாதிடும் வழக்குரைஞர்கள், எழுத்தாளர்களை வக்கிர மனநிலையில் மிரட்டும் நபர்கள் மீது காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர்கள் சங்கத்தினர் புதன்கிழமை (அக்.21) மதுரை தமுக்கம் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:சூரப்பாவை பணிநீக்கம் செய்யக்கோரி மாணவர் சங்கத்தினர் ஆர்பாட்டம்!