தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்து மக்கள் கட்சி பிரமுகர் கொலை - தலைமைக் காவலர் உட்பட ஏழு பேர் கைது - தலைமைக் காவலர் கைது

மதுரையில் நேற்று முன்தினம் இந்து மக்கள் கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமைக் காவலர் உட்பட ஏழு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்து மக்கள் கட்சி பிரமுகர் கொலை
இந்து மக்கள் கட்சி பிரமுகர் கொலை

By

Published : Feb 2, 2023, 10:40 PM IST

மதுரைஜெய்ஹிந்த்புரத்தை அடுத்த வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர், மணிகண்டன். இவர், எம்.கே. புரம் பகுதியில் சொந்தமாக நகைக்கடை நடத்தி வருகிறார். மேலும் இந்து மக்கள் கட்சியின் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் மணிகண்டன் நேற்று முன்தினம் (ஜன.31) எம்.கே. புரம் பகுதியிலுள்ள தனது நகை கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, அவரை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இதில், படுகாயமடைந்த மணிகண்டன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்து மக்கள் கட்சி பிரமுகர் கொலை - தலைமைக் காவலர் உட்பட ஏழு பேர் கைது

இந்த கொலை சம்பவம் குறித்து மணிகண்டனின் மனைவி மகாலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜெய்ஹிந்த்புரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு தலைமைக்காவலராக பணியாற்றும் ஹரிஹர பாபுவின் மனைவிக்கும் உயிரிழந்த மணிகண்டனுக்கும் தகாத உறவு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்து மக்கள் கட்சி பிரமுகர் கொலை - தலைமைக் காவலர் உட்பட ஏழு பேர் கைது

அவர் கருதியதால், ஹரிஹர பாபு நீதிமன்றத்தில் காவல் பணிக்குச்சென்றபோது ஏற்பட்ட பழக்கத்தில் கூலி படையினரை ஏவி விட்டு கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கொலைக்கு மூளையாகச் செயல்பட்ட தலைமைக் காவலர் ஹரிஹர பாபு உட்பட கூலிப்படையாக செயல்பட்ட 7 பேரை காவல் துறையினர் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தப்பி ஓடிய அஜித், தினேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:புதுக்கோட்டை சிறுமி பாலியல் வழக்கு: மேலும் ஒருவர் போக்சோவில் கைது!

ABOUT THE AUTHOR

...view details