தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Mandous Cyclone: நாளை(10.12.222) செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!

மாண்டஸ் புயல் (Mandous Cyclone) காரணமாக சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கோப்புப்படம்
கோப்புப்படம்

By

Published : Dec 9, 2022, 5:28 PM IST

சென்னை:மாண்டஸ் புயல் காரணமா சென்னை, காஞ்சிபுரம் , கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், 10-ஆம் தேதி (நாளை ) நடைபெற இருந்து அண்ணா பல்கலைக் கழகம், சென்னை பல்கலைக் கழகத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

மாண்டஸ் புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், புயல் கரையை கடக்கும் போது பாதிப்புகள் அதிகளவில் இருக்கும் என்பதால், 25 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நாளை சென்னை, காஞ்சிபுரம், கடலூர், வேலூர், ராணிப்பேடை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.

Mandous Cyclone

சென்னை பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு

அதனைத் தொடர்ந்து , சென்னை பல்கலைக்கழகம், அதன் இணைப்புக் கல்லூரிகளில் நாளை நடைபெறுவதாக இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது எனவும், இந்தத் தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் இளங்கோவன் வேலுசாமி தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு

அதேபோல் அண்ணா பல்கலைக் கழகத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் சக்திவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "புயல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு அண்ணா பல்கலை கழகத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள், உறுப்புக்கல்லூரிகளில் நாளை நடைபெறுவதாக இருந்தத் தேர்வு ஒத்தி வைக்கப்படுக்கிறது. இந்தத் தேர்வுகள் மீண்டும் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பாலிடெக்னிக் தேர்வு ஒத்திவைப்பு

அதேபோல் நாளை நடைபெறவிருந்த பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1.12.2022 அன்று நடைபெறவிருந்த பட்டயத் தேர்வுகள் அதே கால அட்டவணையின் படி 17.12.2022 அன்று நடைபெறும்” என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஆன்லைன் ரம்மிக்கு 35-வது பலி; ஆளுநர் இனியும் தாமதிக்க வேண்டாம் - அன்புமணி வலியுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details