மதுரையில் தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் தொடக்கவிழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டார். இதன்பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இந்தியாவிலேயே முதன்முறையாக செய்தியாளர்களுக்கான சிக்கன கூட்டுறவு நாணய சங்கம் அமைத்துக் கொடுத்துள்ளோம்.
ஸ்டாலின் தனது இருப்பை ஊடகங்களில் வெளிப்படுத்துவதற்காக தினசரி அரசுக்கு எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்டு வருகிறார். ஸ்டாலினிடம் பாராட்டு பெறுவது என்பது குதிரை கொம்பாக மாறியுள்ளது. பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சட்டம் குறித்து வரும் கூட்ட தொடரில் வலியுறுத்துவோம் என்றார்.
"டெல்லிக்கு ராஜாதான்... ஆனா தமிழ்நாட்டில் பாஜக வளரனும்" - அமைச்சர் செல்லூர் ராஜு மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான நடவடிக்கைகள் காரணமாக மதுரை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் பாஜகவுடன் கூட்டணி இன்றி ஆட்சி அமைக்க முடியாது என்ற ஹெச்.ராஜாவின் கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், ஹெச்.ராஜா எதாவது பேசிக்கொண்டே இருப்பார். பாஜக டெல்லிக்கு ராஜாவாக இருந்தாலும் தமிழ்நாட்டில் இன்னும் வளர வேண்டும். மோடி போன்ற பிரதமர் வேறு எங்கும் இல்லை. மனித நேயமிக்க பிரதமர் மோடி மட்டும்தான் என்றார்.
மேலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்று விஜயை சித்தரித்து போஸ்டர் ஒட்டியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், விஜய் ரசிகர்கள் சின்ன பிள்ளைகள். அவர்கள் மனதிலும் எங்கள் தலைவரும், அம்மாவும்தான் இருக்கிறார்கள் என்பதுதான் அந்த போஸ்டர் மூலம் தெரிகிறது என்றார்.
இதையும் படிங்க:‘கரோனாவோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள்’ - அமைச்சர் செல்லூர் ராஜூ!