மதுரை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாவுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாக சமூக வலைதளங்களில் வெளியாகும் ஆடியோ குறித்து செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சமூக வலைத்தளங்களில் பரவும் ஆடியோவில் உள்ள குரல் என்னுடையது இல்லை. எனக்கும் அந்த ஆடியோவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம், எங்களுடைய வளர்ச்சி பிடிக்காத சில சமூக விரோதிகளால் இந்த ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தலைமையிடம் கலந்தாலோசித்த பிறகு காவல் துறையில் புகார் அளிக்க முடிவு செய்திருக்கிறேன்.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருவதை முன்னிட்டு கட்சியினரிடையே கலகத்தை ஏற்படுத்தும் நோக்கோடு இந்த ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது.