மதுரை:குடிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கனமழைக்கு நடுவே நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மழையையும் பொருட்படுத்தாமல் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியனரோடு மழையில் நனைந்தபடி அமர்ந்திருந்தார்.
இதனையடுத்து மேடையில் சீமான் பேசுகையில், “குடிவாரி கணக்கெடுப்பு தான் சாதி ஒழிப்பிற்கான முயற்சி , சாதி வாரி கணக்கெடுப்பும், மொழி்வாரி கணக்கெடுப்பும் எடுக்க வேண்டும், குடிவாரி கணக்கெடுத்து இட ஒதுக்கீடு வழங்குங்கள். எதிர்த்து போராடினால் எங்களை செருப்பால் அடியுங்கள்.
நாடு முன்னேறுகிறது என மோடி பேசும் பொய்யை விட திமுகவினர் பேசும் சமூகநீதி என்பது பெரிய பொய், தாழ்த்தப்பட்டோர் என யாரையாவது கூறினால் செருப்பால் அடிப்பேன், ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை என கூறும் அண்ணாமலை, மோடி 8 ஆண்டாக எதுவும் செய்யவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்,
ஹெச்ராஜா வைரமுத்துவை சுடிதார் கவிஞர் என்கிறார். ஆனால் மோடி லெக்கின்ஸ் போட்டு நாடு நாடாக சுற்றுகிறார். இந்து என்பது எனது வழிபாட்டு அடையாளம் தான், மத்திய அரசு நீட்தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்துவிட்டனர், அவரவர் தாய் மொழியில் பேசுகின்றனர். நாம் மொழிகளுக்கே தாயான தமிழ் மொழியில் பேசுகிறோம், இந்த நாட்டு இளைஞர்களை போதை மாத்திரைகளுக்கும், மதுபோதைக்கும் அடிமையாக வைத்து விட்டனர்.