தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 23, 2020, 4:45 PM IST

Updated : Nov 23, 2020, 4:53 PM IST

ETV Bharat / state

மாற்றுத்திறனாளிக்கு நிரந்தர வேலை வழங்கக்கோரிய வழக்கு: மதுரை ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

மதுரை: மாற்றுத்திறனாளி வீரருக்கு அரசு நிரந்தர வேலை வழங்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர், அரசு நிலை அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

seeking permanent employment for a disabled person: Madurai Collector ordered to respond
seeking permanent employment for a disabled person: Madurai Collector ordered to respond

மதுரை புதூர் கண்ணேனந்தல் பகுதியைச் சேர்ந்த பரசுராமன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்துள்ளார். அதில், "நான் 23 ஆண்டுகளாக மாற்றுத் திறன் விளையாட்டு வீரர்களுக்கு இலவச பயிற்சி அளித்துவருகிறேன். அதன்மூலம் பல வெளிநாடுகளில் நடந்த பாரா ஒலிம்பிக் காமன்வெல்த் போட்டிகளில் கலந்துகொண்டு பல வீரர்களை வெற்றிபெற வைத்துள்ளேன்.

இதில் குருநாதன் என்ற விளையாட்டு வீரர் பல வெளிநாடுகளில் நடந்த மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலம் 26 பதக்கங்களை வென்று உள்ளார். மேலும் மலேசிய விளையாட்டுப் போட்டிகளில் குருநாதன் வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், போட்டிகளில் கலந்துகொண்டு நமது நாட்டிற்கு சிறப்புச் செய்துள்ளார்.

மேலும் இந்திய அளவிலும் மலேசியா, லண்டன், துனிசியா, தாய்லாந்து போன்ற நாடுகளிலும் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளார். சர்வதேசப் போட்டிகளிலும் தேசிய மாநில அளவிலான பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்று நமது நாட்டிற்குச் சிறப்புச் செய்துள்ளார். இவர் தற்போது தற்காலிகப் பணியாளராகப் பணிபுரிந்துவருகிறார். இவருக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும்.

அதேபோல மாற்றுத்திறனாளிகளில் சாதனை படைத்த பல வீரர்கள் அரசுப் பணியின்றி தவித்துவருகின்றனர். அவர்களுக்கும் அரசு நிரந்தர பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், இது குறித்த நிலை அறிக்கையை தாக்கல்செய்ய மதுரை ஆட்சியர், தமிழ்நாடு அரசிற்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:'காவல் துறையினர் லஞ்சம் வாங்குவது மனநல பிரச்சனைகளின் வெளிப்பாடே'

Last Updated : Nov 23, 2020, 4:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details