மதுரை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மத்திய சிறையில் உள்ள கைதிகள் மூலம் விதைப்பந்து விநாயகர் சிலைகள் தாயாரிக்கும் பணி மும்முரமாக நடந்துவருகிறது. களிமண்ணால் செய்யப்படும் இந்த சிலைகளில் புன்னை, புங்கை, வேம்பு, நாவல் உள்ளிட்ட விதைகள் வைக்கப்படுகின்றன. நேற்று வரை சுமார் 500 சிலைகள் செய்யப்பட்டன.
விதைகள் வைத்து கைதிகள் உருவாக்கும் விநாயகர் சிலைகள் - History and Culture
மதுரையில் சிறைக் கைதிகள் உருவாக்கிய விதைப்பந்து விநாயகர் சிலைகள் சிறை அங்காடியில் விற்பனை செய்யப்பட உள்ளது.
Etv Bharat
அதற்கு வர்ணம் தீட்டும் பணி தொடங்கியுள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய தினத்தில் இருந்து சிறை அங்காடியில் விற்பனைக்கு வைக்கப்படும் என்று சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி வரும் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதையும் படிங்க: அமெரிக்காவில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் இந்திய வம்சாவளி குடும்பம்
Last Updated : Aug 31, 2022, 10:20 AM IST