தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியரசுத் தலைவர் மதுரை வருகை - பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு - குடியரசுத் தலைவர் மதுரை வருகை

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பிப்ரவரி 18ஆம் தேதி வருகை தருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 15, 2023, 11:01 PM IST

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள்

மதுரை:உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சிவராத்திரி தினமான வரும் 18ஆம் தேதி அன்று காலை 11 மணி அளவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்யவுள்ளார். தொடர்ச்சியாக கோயிலில் நடைபெறும் அன்னதான நிகழ்ச்சியிலும் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகை தரவுள்ள நிலையில் கோயிலை சுற்றி இன்று முதல் 5 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி 8 கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மதுரை மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கியுள்ளவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இதேபோன்று ரயில் நிலையங்களில், விமான நிலையங்களில் பயணிகளிடம் பாதுகாப்பு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று பாதுகாப்பு கருதி மதுரை மாவட்டம் முழுவதும் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீனாட்சியம்மன் கோயிலில் குடியரசு தலைவருக்கான பாதுகாப்பு அதிகாரிகள் இன்று நேரில் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இதில், குடியரசு தலைவரின் வருகை, சாமி தரிசனத்திற்கான ஏற்பாடுகள், அன்னதானத்தில் பங்கேற்று குடியரசு தலைவர் உணவு உண்பதற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், பொதுப்பணித்துறை, காவல் துறை, உளவுத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, சுகாதாரத்துறை, அறநிலையத்துறை, சுற்றுலாத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:ஆளுநராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜகவில் இருந்து விலகல்!

ABOUT THE AUTHOR

...view details