மதுரை கோரிப்பாளையம் பகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக மீத்தேன், ஹைட்ரோகார்பன், அணு உலைக்கழிவு, எட்டு வழிச்சாலை, கெயில் போன்ற திட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் எஸ்.டி.பி.ஐ. மாவட்டத் தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமை தாங்கி, கண்டன கோஷங்களை எழுப்பினார்.
மாநில அரசை மத்திய அரசு கைப்பாவையாக வைத்துள்ளது - முஜிபுர் ரஹ்மான் - Madurai
மதுரை: மத்திய அரசு மாநில அரசை கைப்பாவையாக வைத்து, தனக்கு தேவையானவற்றை சாதித்துவருவதாக எஸ்.டி.பி.ஐ. மாவட்டத் தலைவர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “மத்திய அரசு இங்கே இருக்கக்கூடிய மாநில அரசை கைப்பாவையாக வைத்துக்கொண்டு தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களை சிதைப்பதாகவும், தமிழர்களின் கலாசாரம், பண்பாடுகளை இல்லாது ஒழிப்பது, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே பூலோகத்தில் இருந்து அகற்றிவிடுவது போன்று அஞ்சக்கூடிய வகையில் நடந்துகொள்வதாகவும் உள்ளது.
குறிப்பாக, பல்வேறு நாடுகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட ஹைட்ரோகார்பன் போன்ற திட்டத்தை தமிழ்நாட்டில் 25,000 கிலோ மீட்டர் அளவு குறிப்பாக டெல்டா பகுதி விவசாயி நிலங்களில் அமைக்கவுள்ளனர். வளங்களை அழித்து வழிகளை அமைக்கும் இந்தப் புத்தியை கைவிடுங்கள் என்று இந்த மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறினார்.