இந்தியாவில் இருக்கும் பழமை வாய்ந்த ஐம்பொன் சிலைகளை சட்டத்துக்கு புறம்பாக திருடிச் சென்று, அமெரிக்காவில் விற்பனை செய்துவந்தவர் சுபாஷ் சந்திர கபூர். இவர் திருடிச் சென்ற சிலைகளை நியூயார்க்கில் விற்பனை செய்வது குறித்து அறிந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர், இந்தியாவிடம் சிலைகளை மீண்டும் ஒப்படைக்குமாறு நியூயார்க் காவல் துறைக்கு தகவல் அனுப்பியதன் பேரில், சுபாஷ் சந்திர கபூர் சிலைகளை கடத்திச் சென்று விற்பனை செய்தது அம்பலமானது.
இதையடுத்து, கடந்த 2011ஆம் ஆண்டில் அவரை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் சுபாஷ் சந்திர கபூர், தனது உடல்நலத்தை காரணம் காட்டி ஜாமீன் கேட்டு மதுரை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.